பேராசிரியர் காதர் மொகிதீன், ரவூப் ஹக்கீம் திருச்சியில் சந்திப்பு
திருச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களின் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை (31) மாலை வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அன்னாரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினார். சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது உடனிருந்தார்.
