சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு
சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக எழுகின்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிவாசல் சார்பாக அந்தந்த பள்ளிவாசலின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு, எதிர்காலத்தில் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை இதன்போது முன்வைத்தனர்.
சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், அம்பாறை மாவட்ட சிறுவர் மகளிர் நன்னடத்தை அதிகாரி உட்பட சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் மகளிர் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச பெண்கள் அமைப்பின் தலைவிமார், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
