நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு; அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டத்துறையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்தத் தீர்மானம் இப்போது ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படுவதால், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற வேண்டும்.
இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசாங்கம் தற்போது கொண்டுள்ளது.
