ராபிததுந் நளீமிய்யீனின் 11ஆவது பொதுக்கூட்டம்
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பான ‘ராபிததுந் நளீமிய்யீன்’ 11ஆவது பொதுக்கூட்டம் நேற்று (26) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ. சாகிர் (நளீமி) தலைமையில் நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நளீமிய்யா கலாபீட பரிபாலன சபைத்தலைவர் யாகூத் நளீம், கௌரவ அதிதியான கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் மொஹமட் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், கலாபீட விரிவுரையாளர்கள், பழைய மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
‘ஒன்றாய் இணைவோம், சேர்ந்தே உயர்வோம்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இவ்வமர்வில் விசேட உரைகளும் இடம்பெற்றன.
இக்கூட்டத்தின் போது நளீமிய்யா கலாபீடத்தில் கூடுதல் காலம் சேவையாற்றிய அண்மையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் அஷ்ஷெய்க் கமருஸ்ஸமான் ஞாபகச்சின்னம், பணப்பரிசில் வழங்கி ஏற்பாட்டாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.
இக்கூட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிகின்ற பெருந்திரளான பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும். நேற்றைய அமர்வில் நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றன.













பேருவளை பீ.எம். முக்தார்
