டெங்கற்ற கிழக்கு; பாதுகாப்பான சமூகம்!
டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த
“டெங்கு அற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வு (26) சம்மாந்துறையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு ஒழிப்பு என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்லாது, ஒவ்வொரு பிரஜையினதும் சமூகப் பொறுப்பாகும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே டெங்கு அற்ற சமூகத்தை உருவாக்க முடியும்
காலை 7.00 மணிக்கு சம்மாந்துறை தைக்காப்பள்ளிவாசல் அருகில் ஆரம்பமான இந் நிகழ்வில், டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.







