அர்ச்சுனாவுக்கு பிடியாணை
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதையடுத்து, அர்ச்சுனா இராமநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
