‘முன்மாதிரி இமாம்’ எனும் தொனிப்பொருளில் மஸ்ஜித் இமாம்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் கொழும்பு கிழக்கு கிளைக்குட்பட்ட மஸ்ஜித் இமாம்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்று (21), கொடிகாவத்தை, நாஸ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
‘முன்மாதிரி இமாம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு கிழக்கு கிளை ஜம்இய்யாவிற்குட்பட்ட மஸ்ஜித் இமாம்கள் பலரும் கலந்து பயன்பெற்றனர்.
ஆலிம்களின் ஆளுமை விருத்தி மற்றும் குத்பா உரைகளை பயனுள்ள முறையில் அமைப்பதற்கான திறன்கள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது விளக்கக் காட்சிகளுடன் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இதில், ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், அஷ்-ஷைக் எம்.எப்.எம். ரியாஸ் முஃப்தி (ரஷாதி), ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.





