உள்நாடு

கண்டி சித்திலெப்பை கல்லூரிக்கு இந்திய எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு

இந்தியா நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் கவிஞரும் பன்னூலாசிரியருமான மு. முகம்மது சலாகுத்தீன் எழுதிய நூல்களின் ஒரு தொகுதியை சித்திலெப்பை கல்லூரியின் நூலகத்திற்கு கவிஞர் ரஷீத் எம். றியாழ் அதிபர் எம்.ஏ .அலீமிடம் வழங்கி வைத்தார்.

கண்டி சித்திலெப்பை கல்லூரியின் உயர்தர பிரிவு மாணவர்களுக்கான வரவேற்பு விழா (22) வெகு விமரிசையாக கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை பேராசிரியர் எம் எஸ் எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இவ்விழாவில், கண்டி கல்வித்திணைக்களத்தின் சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகரும் பத்திரிகையாளரும் கவிஞருமான ரஷீத் எம். றியாழ் விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போதே இந்நூல்களின் அன்பளிப்பும் இடம்பெற்றது.

இந்தியா தமிழ்நாடு திருச்சியில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் போது அன்பளிப்பு செய்யப்பட்ட பன்னூலாசிரியர் மு. சலாகுத்தீனின் நூல்களே இங்கு கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பிரதி அதிபர்கள், சமூகநல இயக்கப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *