உள்நாடு

புகையிரதப் பாதைகள் விஸ்தரிப்பு குறித்து பாராளுமன்றத்தில் நாளை தனி நபர் பிரேரணை

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலும், மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலும் புகையிரதப் பாதையை விஸ்தரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை சமர்ப்பித்துள்ள விசேட தனிநபர் பிரேரணை, நாளை வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் புகையிரதப் பாதை விஸ்தரிப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் போக்குவரத்து ரீதியாகப் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலான ரயில் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அம்பாறை மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இந்த முக்கிய விவாதத்தின் மூலம், கிழக்கு மற்றும் ஊவா மாகாண மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குக் காத்திரமான தீர்வொன்று கிட்டுமெனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *