உள்நாடு

சாய்ந்தமருதில் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் 30 ஆவது பேராளர் மாநாட்டில்100 பேருக்கு கௌரவம்

லக்ஸ்டோ மீடியாவின் 30 ஆவது வருட பேராளர் மாநாடு மற்றும் நேசம் சஞ்சிகை வெளியீடு, திறமைக்கான தேடல் விருது வழங்கும் விழாவும் கலைநிகழ்வும் “திறமைக்கான தேடல் – Talent Awards 2026” எனும் மகுடத்தின் கீழ் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் (19) இடம்பெற்றது.

லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், மூதூர் ஜே.எம்.ஐ., உலகவலம் மற்றும் நேசம் டிவி ஆகியவற்றின் ஊடக அனுசரணையில், இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், நேசம் டிவி மற்றும் உலக வலத்தின் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சிரேஷ்ட ஒலி – ஒளிபரப்பாளருமான கலாநிதி ஏ.எல். அன்ஸார் தலைமை தாங்கினார்.

இந்த முப்பெரும் விழாவில்
கிராமிய பொருளாதார முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே. காதர் மஸ்தான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

முன்னிலை அதிதிகளாக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான தமிழ் மருதமாமணி கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது, சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் நேசம் டிவியின் பொறுப்பதிகாரியுமான ஹிபத்துல் கரீம், செயின் லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான தொழில் அதிபர் எம்.எம்.எம்.சஹில், ரெலக்ஸ் கார்டன் உரிமையாளர் சமூக செயற்பாட்டாளர் ஜெமில், டெக்டன் கம்பனியின் பணிப்பாளர் நௌஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி மூஷா, இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளரும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்கின் பெண்கள் பிரிவுத் தலைவியுமான முஹம்மட் றாசிக் பாத்திமா றஸ்மியா, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பொதுச்செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உமர், சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானா, சமாதான நீதவான்
மலிக், (PHI) சமாதான தூதுவர் நிசார் ஜே.பி., (NCJP) என்.சி.ஜே.பி. யின் செயலாளர் சஹான், கலைஞர் ஆர்.ஜே ஜெயா, அதிபர் கலைமாமணி வசந்தகாலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது நேசம் சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், நேசம் சஞ்சிகையின் திறன்நோக்கு அதிதியாக மூதூர் ஜே.எம்.ஐ.இஹ்ஸான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நேசம் பத்திரிகையின் முதற்பிரதியை கலைஞர் முனைமருதவன் எம்.எச்.எம். இப்ராஹிம் பெற்றுக்கொண்டார்.

மேலும், மனித நேயன் இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கௌரவப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

லக்ஸ்டோ மீடியாவின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 100 பேருக்கு “திறமைக்கான தேடல் – Talent Awards 2026” விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. விஷேடமாக
தமிழ் மருதமாமணி ஏ.பீர்முஹம்மத்
அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்
விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும், கடந்த ரமழான் மாதத்தில் லக்ஸ்டோ மீடியா, உலக வலம் நேசம் டிவி அனுசரணையில் ஊடகவியலாளர்
விதுசாவின் தயாரிப்பில் நடத்திய இறை நிலா இஸ்லாமிய கேள்வி–பதில் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வை முன்னிட்டு,
தேசிய சமாதான நீதிபதிகள் சபையின் உறுப்பினர்கள் மற்றும் லக்ஸ்டோ மீடியா உறுப்பினர்களுக்காக “சட்டம், ஊடகம் மற்றும் தலைமைத்துவம்” தொடர்பான செயலமர்வும் காலை நேரத்தில் நடைபெற்றது.

எழுத்தாளர்கள்,bஇலக்கியவாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சமாதான நீதிவான்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கவிஞர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் வரவேற்புரையை றிசாமா லக்ஸ்டோ ஊடகச் செயலாளர் நிகழ்த்தியிருந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பை அறிவிப்பாளர் றிம்ஷான், ஹரீஸ் ஹமீட், இன்சிரா இம்தியாஸ் ஆகியோர்
வழங்கியிருந்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *