யாழ்ப்பாண மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட இருவருக்கு உயரிய Doctor of Letters (D.Litt.) கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா சார்பாக வழங்கப்பட்ட உயரிய Doctor of Letters (D.Litt.) கௌரவப் பட்டத்தின் மூலம், அமெரிக்கா மற்றும் டென்மார்க் நாடுகளைச் இரு முதுநிலை ஆசிரியர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் யாழ்ப்பாண மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
இவர்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் தமிழ்க்கலை, பண்பாட்டிற்கான அர்ப்பணிப்பை பாராட்டி வழங்கப்பட்ட இந்த கௌரவம், ஈழத்தமிழர்களுக்கு
பெருமை சேர்க்கும் ஓர் உயரிய அங்கீகாரமாகும்.
இந்த பட்டத்தை பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் நியூயார்க் நகரை சேர்ந்த டாக்டர் இணைந்து பட்டத்தை இருவருக்கும் வழங்கியிருந்தார்.


