உள்நாடு

திகாமடுல்ல மீடியா போரம் மற்றும் தேசிய ஊடக கலை இலக்கியமும் ஒன்றிணைந்து நடாத்திய ஊடக செயலமர்வும், ஒன்று கூடலும்

திகாமடுல்ல மீடியா போரம் மற்றும் தேசிய ஊடக கலை இலக்கிய ஒன்றிணைந்து நடாத்திய ஊடக செயலமர்வும், ஒன்று கூடலும் ஒலுவில் கிரீன்வில்லாஹ் ஹோட்டலில் திங்கள்கிழமை (29) நடைபெற்றது.

போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களின் சட்டவரம்புகள், மற்றும் ஊடகவியலாளர்களின் ஒழுக்க விழுமியங்கள் எனும் தலைப்புக்களில் சிரேஷ்ட சட்டத்தரணி, கலாநிதி கே. சமீம், ஊடகவியலாளர், போரத்தின் பிரதித்தலைவர் ஜெஸ்மி எம் மூஸா ஆகியோர் வளவாளராக கலந்த கொண்டு செயலமர்வை நடத்தினர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.யெம். தாஜ், ஊடகவியலாளர் ஏ.ஜீ.எம். தௌபீக், கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
போரத்தின் உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் என பலரும் கலந்த கொண்ட நிகழ்வில் துறைசார் பலர் கௌரவிக்கப்பட்டனர் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ. எல்.தௌபீக், மொழிபெயர்ப்பாளர் எம். ஐ.றூசைக், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஆஸ்பீல், பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.பைறூஸ் அதிதிகளினால் பொன்னாடை போத்தி,நினைவுச்சின்னம், வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

(எம்.எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *