“ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்”, முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து
முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள்
சினிமாவில் உச்ச நடிகராக இருந்து, அரசியலிலும் பெரும் விசில் புரட்சியை ஏற்படுத்தி, தற்போது தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் ஜோசப் விஜய். அவர் திங்கள்கிழமை தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை காலை தொடங்கிய போது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வர் ஜோசப்ஸவிஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாள் வாழ்த்துரை உடன் அவை நிகழ்வை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தொடங்கி வைத்தார். அதேபோல் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகள் குழுத் தலைவர்கள் முதல்வர் விஜய் ஜோசப் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இந்த நிலையில், முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு.” என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உங்கள் முயற்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.
தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியத்தை பாதுகாப்பதிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதிலும் நான் உங்களுடன் துணை நிற்கிறேன்.” என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினார்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது )
