உள்நாடு

கொழும்பு மாவட்டத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் நீர் தடை

லபுகம, கலட்டுவாவவிலிருந்து பொரலஸ்கமுவ வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை (இன்று) 24.06.2026 இரவு 8.00 மணி முதல் வியாழக்கிழமை (நாளை) 25.06.2026 இரவு 8.00 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படும் பகுதிகள்:

  • பாதுக்க, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்த
  • மகரகமவிற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகிறது.

நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு சபை வருத்தம் தெரிவிக்கிறது. மேலும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது.

(விசாரணை – 1939)

(பேருவலை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *