உள்நாடு

சாய்ந்தமருதில் ஒரு கோடி நிதி ஒதுக்கீட்டில் மருதூர் சதுக்கம், உ‌ல்லாச சுற்றுலா தோணா அபிவிருத்தி

ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் மருதூர் சதுக்கம் மற்றும் உ‌ல்லாச சுற்றுலா தோணா (Sainthamaruthu Lagoon) அபிவிருத்தி செய்வதற்குரிய கள விஜயத்தினை (22) நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மேற்கொண்டார்.

மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை பிராந்திய அபிவிருத்தி முன்னோடிக்கூட்டம் இன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிவிருத்திக் குழு தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் சந்தன, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அம்பாரை மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ஸாஹிர், கல்முனை பிராந்திய நீர்ப்பாசன பிரதம பொறியியலாளர் ஹகீம், கிழக்கு மாகாண கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எம். துலஷிதாஸன், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்,

எதிர்கால திட்டங்களாக பின்வரும் அபிவிருத்திகள் பாராளுமன்ற உறுப்பினரால் சிபாரிசு செய்யப்பட்டன.

காரைதீவு – கல்முனை ஒரு வழிப்பாதை அபிவிருத்தி, கல்முனை பலாஹ் விளையாட்டு மைதான அபிவிருத்தி, கரைவாகுத்திட்டம், கல்முனை பொதுச் சந்தை விரிவாக்கம், கல்முனை பஸ் நிலைய விரிவாக்கம், சாய்ந்தமருது பெண்கள் சந்தை அபிவிருத்தி, கல்முனை பஸ் நிலைய விரிவாக்கம், கல்முனை பஸ் தரிப்பிடம் முதல் க்றீன் பீல்ட் வரை நடைபயிற்சி மேற்கொள்ளக்கூடிய நடைபாதை, க்றீன் பீல்ட் அபிவிருத்தி போன்றவை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *