உள்நாடு

ஓட்டமாவடி ஹீரோ லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தின்​கிரிக்கெட் சுற்றுத்தொடர் நிகழ்வும் புதிய சீருடை அறிமுகமும்

​ஓட்டமாவடி ஹீரோ லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டும், ஹீரோ T20-பிளாஸ்ட் சீசன்-03 கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான (Draw Event) குலுக்கல் நிகழ்வும், ஹீரோ லயன்ஸ் அணியின் புதிய கிரிக்கெட் சீருடை அறிமுக நிகழ்வும் கடந்த 21.06.2026 இரவு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

ஹீரோ லயன்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவரும், ஹீரோ T20-பிளாஸ்ட் சீசன்-03 தலைவருமான எம்.ஏ. இமாஸ் தலைமையில் மற்றும் கழகத்தின் செயலாளர் எஸ்.எல்.நளீரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக
ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் எம்.எம்.எம். ஹலால்தீன் கலந்து கொண்டதுடன்
கௌரவ அதிதியாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.டி.எம். அன்வர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கல்குடா நடுவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும், ஹீரோ T20-பிளாஸ்ட் சீசன்-03 போட்டிக்கான அணிகளின் குலுக்கல் (Draw Event) அணியின் புதிய சீருடை அறிமுகம், போட்டியில் பங்கேற்கும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 24 விளையாட்டு கழக அணிகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு தங்களுக்கான Draw வினை தெரிவு செய்தனர்.

25 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் பங்காற்றிவரும் ஹீரோ லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இவ்வாண்டு 24 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்டமான ஹீரோ T20-பிளாஸ்ட் சீசன்-03 போட்டியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *