உள்நாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் புத்தளம் விஜயம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அண்மையில் (05) புத்தளம் நகருக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது கட்சியின் பிரதேச மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

புத்தளம் கரைத்தீவு, உளுக்காப்பள்ளம், புளுதிவயல், பாலாவி, நாகவில்லு மற்றும் கொத்தாந்தீவு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கட்சி
முக்கியஸ்த்தர்களுடனான கலந்துரையாடல்களிலும் அவர் பங்கேற்றார்.

புத்தளம் மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான ரணீஸ் பதுருதீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்புகளில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது, பிரதேச மக்களின் பிரச்சினைகள், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *