ADD LIONS விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு…!!!
அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவில் செயற்படும் ADD LIONS விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றது.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் இளம் சமூக சேவகர் தொழிலதிபர் றியா மசூர் Bsc(Hons) in IT(UK),LLB(Hons) அவர்கள் கழகத்தின் புதிய சீருடையினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து பின்னர் கழகத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கழகத்திற்கான புதிய சீருடை கௌரவ றியா மசூர் அவர்களின் சொந்த நிதி மூலம் வழங்கி வைக்கப்பட்டது. கௌரவ றியா மசூர் அவர்கள் இளைஞர்களின் அபிவிருத்தியில் இப்பிராந்தியதில் பிரதேச வேறுபாடுக ளுக்கு அப்பால் பல்வேறுபட்ட உதவிக ளை செய்து வருவதை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
இதேபோன்று இவருடைய தந்தை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பை அவர்கள் கிழக்கு மாகாணம் பூராகவும் பல்வேறு பட்ட சமூகப் பணிகளைச் செய்து பலரதும் பாராட்டுகளைப் பெற்றதை இவ் விடயத்தில் விசேடமாக குறிப்பிட்டுக் கூறலாம்.
கௌரவ றியா மசூர் அவர்கள் இதேபோன்று பல இளைஞர்களை உள்ளவாங்கி பல கழங்களை உருவாக்கி அவர்களுக்கான தேவைப்பாடுகள் நிவர்த்தி செய்து வருகின்றார்.இச் செயற்பாடுகள் காரணமாக இளைஞர்களின் அதி கூடிய செல்வாக்குபெற்றவர் என்பது திண்ணம்.



(றியாஸ் இஸ்மாயில்)
