வளமான நாடு அழகான வாழ்க்கை வட மத்திய நிகழ்வு.
வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தேசிய கொள்கையின் துணைத் திட்டமான சமூக சக்தி செயல் திட்டத்தின் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத் திட்டங்களின் வடமத்திய மாகாண பிரதான நிகழ்வானது அனுராதபுரம் கவரக் குளம் வன்னம்மடுவ வில் மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் (02) ம் திகதி நடைபெற்றது.
இதன் கீழ் பஹல வன்னம்மடுவ பகுதி விவசாயிகளின் பல்லாண்டு காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வரும் நெல் சாகுபடிக்கான நீர் வழங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ” உஸ்ஸான வாரி கிரம ” முறையின் கீழ் நீர்ப்பாசன திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்ததிட்டம் நிறைவடைந்த பின்னர் சிறுபோக மற்றும் பெரும்போகம் ஆகிய போகங்களை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். இத்திட்டத்தின் மூலம் 60 ஏக்கர் வயல் நிலத்திற்கு நீர் வழங்க முடியும்.
இதற்கான மொத்தச் செலவு சுமார் 100 மில்லியன் ரூபாவாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதில் இரண்டரை மில்லியன் ரூபாய் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் செயல்திட்டத்தின் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள நிதியை சமூக சக்தி மூலம் அப்பகுதி மக்களின் பங்களிப்புடன் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்வின் போது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்யா ஸ்ரீ ஹேரத் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.



(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )
