தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் லெபனான் இணக்கம்
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது.
வொஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற உயர்மட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதல்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் மற்றும் லிடானி ஆற்றிற்கும் இஸ்ரேல் எல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதிகளில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் வெளியேறிய பின்னர், அங்கு லெபனான் இராணுவம் மாத்திரம் முழுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டை கையிலெடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
