சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மாத்தளை நகரில் விழிப்புணர்வு பேரணி.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று காலை பாடசாலை மாணர்களால் மாத்தளை நகரில் விழிப்புணர்வு எதிர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
இதன்போது, இதன் ஆரம்ப நிகழ்வாக மாத்தளை விஜய கல்லூரி மண்டபத்தில் மாணவர்களுக்கு புகையிலை, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பது தொடர்பான விளக்கவுரை ஒன்றும் நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்த சாசன சமயங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க அவர்களும் , அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களது விழிப்புணர்வு பேரணி மாத்தளை விஜய கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி மாத்தளை நகர்வலம் சென்றது. இப்பேரணியில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கி புகைத்தலுக்கும் போதைப்பொருள் பாவனைக்கும் எதிரான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியில் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க அவர்களும் கலந்து கொண்டார்.

(மாத்தளை எம்.சதூர்தீன்)
