2026-27 ஆண்டுகளுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒப்பந்தம் வெளியீடு
2026-2027ஆம் ஆண்டுக்கான தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தங்களை சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தக் காலம் 2026 ஏப்ரல் 1 முதல் 2027 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 46 வீரர்கள் தேசிய ஒப்பந்தங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வீரர்களின் திறமை, நிலைத்தன்மை, உடற்தகுதி, ஆற்றல் மற்றும் தேசிய அணியின் மூலோபாயத் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்கள் A1, A2, B1, B2, C1 மற்றும் மத்திய ஒப்பந்தம் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தம் பெற்ற வீரர்களின் விபரம்
குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்க, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ, தசுன் ஷானக, மகீஷ் தீக்ஷன, ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, நிரோஷன் டிக்வெல்ல, ஜெஃப்ரி வென்டர்சே, பிரபாத் ஜயசூரிய, விஷ்வ பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, தில்ஷான் மதுஷங்க, பவன் ரத்நாயக்க, இஷான் மலிங்க, மிலான் ரத்நாயக்க, லஹிரு குமார, கசுன் ராஜித, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், கமில் மிஷார, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார, சோனல் தினுஷ, சஹான் ஆராச்சிகே, பிரமோத் மதுஷான், லசித் குரூஸ்புள்ளே, லஹிரு உதார, நுவனிது பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், இஷித்த விஜயசுந்தர, நிஷான் மதுஷ்க, அகில தனஞ்சய, சமிக கருணாரத்ன, பசிந்து சூரியபண்டார, மொஹமட் ஷிராஸ், வனுஜ சஹான், திலும் சுதீர மற்றும் தரிந்து ரத்நாயக்க.
அதேநேரம் கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே, விஜயகாந்த் வியாஸ்காந்த், இஷித்த விஜயசுந்தர, வனுஜ சஹான், திலும் சுதீர மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் முதன்முறையாக தேசிய வீரர் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தமானது தெரிவுசெய்யப்பட்ட வீரர்களுக்குத் தேவையான ஆதரவு, கட்டமைப்பு மற்றும் வளங்களை வழங்குவதன் மூலம், அவர்கள் உயர்மட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுவதையும், நாட்டின் கிரிக்கெட் நீண்டகால வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
