அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் சக்கர நாற்காலி வழங்கி வைப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சமூக சேவை பிரிவு பொறுப்பாளர் அஷ்ஷேக் ஸனூஸ் அஷ்ரபி அவர்களின் ஏற்பாட்டில், 4ம் கட்டை நியூசிட்னி பகுதியில் உடல்நலக் குறைபாட்டால் நடமாடுவதில் சிரமம் அனுபவித்து வந்த தேவையுடைய ஒருவருக்கு சக்கர நாற்காலி (Wheel Chair) ஒன்று நேற்று (19) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
சமூகத்தில் உதவி தேவைப்படும் மக்களின் அவசியங்களை உணர்ந்து, மனிதநேய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் ஜம்இய்யாவின் சேவைத்திட்டங்களில் ஒன்றாக இந்நிகழ்வு அமைந்தது.
இந்நன்கொடையின் மூலம் பயனாளி தனது அன்றாட நடவடிக்கைகளை சிரமமின்றி மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இந்நற்காரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தனவந்தருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
சமூக சேவை உபகுழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை
