யாழ் தேவி புகையிரத சேவை மீண்டும் இன்று ஆரம்பம்
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வழியாக பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் இன்று (11) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் என ரயில்வே திணைக்கம் அறிவித்துள்ளது.
திங்கள், புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான ரயில் சேவை இடம்பெறும்.
இந்த ரயிலானது குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டது.
ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட புகையிரத நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
