உள்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு சஜித் பிரேமதாச வாழ்த்து

தமிழகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என இலங்கையின் எதிர் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச எக்ஸ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி நீங்கள் பேசினீர்கள் வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது மட்டுமே கட்டப்பட்ட சமூகங்கள் இறுதியில் தனித்துவிடப்படும் என்பதையும்; அதே நேரத்தில் நீதி மற்றும் சகவாழ்வின் மீது கட்டப்பட்ட சமூகங்களே மக்கள் உண்மையாக வாழ விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கும் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.

உலகம் ஏற்கனவே பிரிவினைகளால் நிறைந்துள்ளது. நம் பிராந்தியத்தில் உள்ள மக்கள் அனைவரும் மொழி, மதம் அல்லது அடையாளம் கடந்து உண்மையாக எதிர்பார்ப்பது சமூக முன்னேற்றம், நீதி மற்றும் நிலையான தன்மையையே ஆகும். நம்மைப் பிரிக்கும் விடயங்களை விட, நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளும் ஒற்றுமைகளும் மிக அதிகம்.
இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும், கடந்த காலத்தில் மற்றவர்கள் இடைவெளியை உருவாக்கிய இடங்களில் புரிதலை ஏற்படுத்துவதற்கான ஆற்றலையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *