உலகம்

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரின் முகம் தான் இந்த விஜயின் முகம்; முதல்வராக பதவி ஏற்ற பின் சி. ஜோசப் விஜய் பேச்சு

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரின் முகம் தான் இந்த விஜயின் முகம்.சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக உறுதி செய்வேன் என்னை அவமானப்படுத்தியவர்களுக்கும், 8 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவேன். மோசமான நிலையில் தமிழ்நாடு நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று முதல்வராக பதவி ஏற்றபின் சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவிவேற்ற பின், சென்னை நேரு ஸ்டேடியத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
அந்தக் கையெழுத்துகள்.
முதல் கோப்பாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் திட்டத்தில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். அதைத் தொடர்ந்து சிங்கப்பெண் மற்றும் போதை தடுப்பு சிறப்பு குழு தொடர்பான இரு திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.பின்னர் உரையாற்றியவர், உற்சாகத்துடன் செல்ஃபி எடுக்க… அரங்கம் ஆர்ப்பரித்தது.

முதல்வராக முதல் மூன்று திட்டங்களை கையெழுத்த பின் முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசியதாவது : “நெஞ்சில் குடியிருக்கும்..” என சொல்லி தனது உரையை தொடங்கினார்.
எனக்கு வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும், நான் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.நான் தேவதூதன் அல்ல, சமானிய மனிதன், பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.இது புதிய தொடக்கம், சமூக நீதிக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.

“ஒரு உதவி இயக்குநரின் மகனாக என் வாழ்க்கையை தொடங்கி, இங்கு இன்று நிற்கிறேன். வறுமையை அறிந்தவன். நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. உங்களில் ஒருவன் நான்.”

“நான்தான் என் அரசில் ஒரே அதிகாரம். பல அதிகார மையங்கள் எல்லாம் இல்லை. ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என நினைக்க வேண்டாம். ஆட்சிக்கு வந்துவிட்டோம், ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே அழித்து விடுங்கள்.”

தமிழக அரசின் நிலை 10 லட்சம் கடன் கோடி கடனில் உள்ளது. இதற்கு முன்னதாக இருந்தவர்கள் கஜானாவை காலி செய்துள்ளனர். அங்கு எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.இன்று தமிழ்நாடு அரசின் நிலைமை குறித்து உங்களிடம் தெரிவிக்க வேண்டும். முன்பிருந்த அரசு கஜானாவை காலி செய்து விட்டது. தமிழ்நாடு அரசின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். வெளிப்படையாக செயல்படுவேன். இது உங்கள் ஆட்சி சொன்னதைச் செய்வேன். அதற்கு நீங்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் அளிக்க வேண்டும்.

எனக்கு அவமானம், கஷ்டம் கொடுத்தவர்களாக இருந்தாலும் நண்பன். எதிரி என யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான் முக்கியம் என்னைய நம்புங்க.

எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், அனைத்தையும் சரி செய்வேன், அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை.100 சதவீதம் நீங்கள் என்னை நம்பலாம்.
எங்கள் அரசாங்கத்தில் இணை, துணை என யாரும் இல்லை ஒரே Power Center நான் மட்டு தான்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரின் முகம் தான் இந்த விஜயின் முகம்.அதில் பொய் வாக்குறுதிகளை தான் எப்போதும் தருவது கிடையாது என்றும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

முகத்தை மூடிக்கொண்டு யாரையும் சந்திக்க மாட்டேன்.
என் வலி, வேதனைகளை தொண்டர்களும் அனுபவித்தனர்.
மக்கள் பணத்தை தொடமாட்டேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்வேன். அதே நேரத்தில் எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்கள் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். பெண்களுக்கான பாதுகாப்பை கண்டிப்பாக உறுதி செய்வேன், போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன், நமது பசங்களை காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு. சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக உறுதி செய்வேன். என்னை அவமானப்படுத்தியவர்களுக்கும், 8 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவேன்.

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, ரேஷன் போன்ற அடிப்படை பிரச்சினைகளில் முழு முதல் கவனம் செலுத்துவேன். நான் மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன். எனக்கு அந்த அவசியம் இல்லை. அதுபோல நான் யாரையும் தப்பு செய்யவும் விட மாட்டேன். எனது அரசில் யாரும் தவறு செய்ய விடமாட்டேன். ஜெயித்துவிட்டோம் என ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்களாம் என்ற என்ணம் இருந்தால், அதனை உடனே மறந்துவிடுங்கள். என் அரசில் ஒரே அதிகார மையம்தான், அது நான் தான். பல அதிகார மையங்கள் இங்கே கிடையாது. பெண்கள், விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் நம் அரசின் நன்றாக இருப்போம். சிறுபான்மையினருக்காக நமது அரசு எப்போதும் துணை நிற்கும். இந்து, முஸ்லிம், கிறித்துவர்களுக்கான முகம் தான் இந்த விஜய்யின் முகம்.

முக்கியமாக இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பிகளுக்கு நன்றி. அவர்களால் தான் இந்த விஷயம் நடந்துள்ளது. அவர்களின் எதிர்காலத்துக்காக திட்டங்களை நிறைவேற்றுவேன். தவெக தோழர்களுக்கு நன்றி. வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்.

மக்கள் நலனை மட்டுமே பிரதானமாக கொண்ட நம் அரசுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, வேணுகோபால், பிரவீன் சக்கரவர்த்தி, சிபிஎம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், வன்னியரசு, சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும்”உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

த.வெ.க. தொண்டர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாருங்கள் புதிய அரசை நடத்திக்காட்டுவோம்.
நல்லது நடக்கும், நம்பிக்கையாக இருங்கள், மீண்டும் சந்திப்போம்… இல்லை இனி மீண்டும், மீண்டும் சந்திப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *