உள்நாடு

புத்தளம் அட்டவில்லு காணியில் சிறுத்தை, புள்ளிமான் தோல் மற்றும் தோட்டாக்கள் மீட்பு

புத்தளம் அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காணியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து நடாத்திய அதிரடி சோதனை நடவடிக்கையின் ஊடாக 09 தோட்டாக்கள், சிறுத்தையின் தோல் மற்றும் புள்ளிமான் தோல் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

விமானப்படை புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கருவலகஸ்வெவ, ரிதிகம, குருநாகல் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகள் இணைந்து நடாத்திய விஷேட சுற்றிவளைப்பின் ஊடாக புத்தளம் அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் காணியில் 09 தோட்டாக்கள் கடும் பாதுகாக்கப்பட்ட சிறுத்தையின் தோலினால் செய்யப்பட்ட சிறுத்தை உருவம் மற்றும் புள்ளிமான் தோல் என்பவற்றை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *