நிறைவேற்று அதிகாரத்தால் நீதிமன்றத்துக்கு அழுத்தம்.விவாதம் கோரிய பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு.

நீதிமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தத்தைக் கண்டித்து, இது தொடர்பில் விவாதத்தை நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவரின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட பிரேரணை எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க, பிரதி முதற்கோலாசான்களான ஜே.சி.அலவதுவல, அஜித் பி பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் இன்று (06) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
