உள்நாடு

இன்று இலங்கை வருகிறார் மாலைதீவு ஜனாதிபதி

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இன்று (03) விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த போக்குவரத்துத் திட்டம் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை மாலைதீவு ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதி ஊடாக கொழும்பிற்கு பிரவேசிக்கவுள்ளார்.

அந்த நேரத்தில், விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதால், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *