பிசியோதெரபி மருத்துவ நிலையம் திறந்து வைக்கப்பட்டது
மூட்டு வலி நரம்பு சம்மந்தமான பிரச்சினைகள்பெண்களுக்கான விஷேட பிசியோதெரபி சிகிச்சை முறைகளுக்கான (WeHeal physio and Rehab Clinic)சீனன் கோட்டை, ஸைக்குலர் வீதியில் அமைந்துள்ள சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி மருத்துவ நிலைய பொறுப்பாளர் டாக்டர் ஹஸ்னா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சீனங் கோட்டை பள்ளிச் சங்க இனணச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம் சிஹாப் திறந்து வைத்தார்.பேருலை நகரபிதா மபாஸின் அஸாஹிர் உட்பட பள்ளிச் சங்க உறுப்பினர்கள்,உலமாக்கள்,வைத்தியர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மௌலவி எஸ்.எச்.எம்.இம்ரான்(ஹுமைதி) அவர்கள் பாங்கு சொல்ல அஷ்ஷைய்க் மக்கி மன்ஸுர்(நளீமி) அவர்கள் துஆ நிகழ்த்தினார்.மற்றும் சீனங் கோட்டை பள்ளிச் சங்க தத்தின் உப தலைவர் அல்ஹாஜ் அஷ்ஷைய்க் எம்.எஸ்.எம்.ரிழ்வான்(நளீமி) அவர்கள் உரை நிகழ்த்த சீனங் கோட்டை பள்ளிச் சங்கத்தின் இணை செயலாளர் அல்ஹாஜ் கலீபதுஷ் ஷாதுலி அஷ்ஷைய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) அவர்கள் ஜலாலா கூற இந்நிகழ்வு மிக சிறப்பாக முடிவுற்றது.







(பேருவலை பீ.எம்.முக்தார்)
