ஆசிய கடற்கரை விளைடாட்டு போட்டிகள்; இலங்கைக்காய் தங்கம் வென்றார் நிபுணி வாசனா
சீனாவில் நடைபெற்று வரும் 6-ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், மற்போர் (Wrestling) விளையாட்டின் பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று நிபுணி வாசனா சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை டொன் தி கிம் ஓன்ஹ்-ஐ 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து நிபுணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
