மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளத.
அதன்படி, மேல், சபரகமவ, மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியடன் கூடிய மழையும் மின்ன்ல தாக்கமும் ஏற்படும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
