உலகம்

உலக சுகாதார சேவையில் சவூதி அரேபியாவின் மனிதாபிமான பணிகள் மற்றும் KSrelief இன் அர்ப்பணிப்பு

உலகம் பல்வேறு சவால்களையும் எதிர்பாராத நெருக்கடிகளையும் எதிர்கொண்டு நிற்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், மனிதாபிமான சேவைகளில் ஒரு ஒளி வீசும் நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது.

குறிப்பாக, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) வழியாக உலகின் பல பகுதிகளில் அவசர கால உதவிகள், அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் மற்றும் நோய்த்தடுப்புத் திட்டங்களை வழங்கி, எண்ணற்ற உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் அந்த நாடு தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது. இந்த செயல்பாடுகள் சாதாரண நிவாரணப் பணிகள் மட்டுமல்லாது, மனிதநேயத்தின் உண்மையான அர்த்தத்தையும் அதன் உன்னதத்தையும் உலகிற்கு உரக்கச் சொல்லும் சான்றுகளாக அமைகின்றன.

அவ்வாறே, மலேரியா போன்ற உயிர்க்கும் ஆபத்தான தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதிலும் KSrelief முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, எமன் நாட்டில் மலேரியா தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO) உடன் அமெரிக்க டாலர் 12 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் 2025 மார்ச் முதல் 2028 பிப்ரவரி வரை அமல்படுத்தப்படுவதுடன், மலேரியா பரவலைத் தடுக்கவும், மக்கள் உயிர்களை பாதுகாக்கவும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

மேலும், எமன் மற்றும் சூடானில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துவ உதவிகள், செனெகலில் மலேரியா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் KSrelief உலகளவில் மலேரியாவை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னுடைய உறுதியான பங்களிப்பை வெளிப்படுத்துகிறது. இது சவூதி அரேபியாவின் மனிதாபிமான அர்ப்பணிப்பின் மேலும் ஒரு வலுவான சான்றாகும்.

மேலும், உலக சுகாதார நிறுவனம் (WHO) போன்ற சர்வதேச அமைப்புகளுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுவதன் மூலம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் சவூதி அரேபியா தனது பொறுப்பை மிக உறுதியுடன் நிறைவேற்றி வருகிறது. இது ஒரு தேசத்தின் கடமையைத் தாண்டி, உலக சகோதரத்துவத்தின் மிக அழகிய வெளிப்பாடாகவும், சக மனிதர்களின் மீதான அக்கறையாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த உயர்ந்த மனிதாபிமானப் பணிகளின் பின்னணியில் உள்ள தலைமைத்துவம் மற்றும் அதன் வழிகாட்டுதல் போற்றுதலுக்குரியது. சவூதி அரேபியாவின் மன்னர் பெருமதிப்பிற்குரிய சல்மான் பின் அப்துல் அஜிஸ் ஆல் சவுத் அவர்களின் கருணைமிக்க வழிநடத்தலும், இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்களின் நவீன மற்றும் முன்னோக்கிய பார்வையும் இந்தப் பணிகளை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தி வருகின்றன. அவர்கள் மனிதகுலத்தின் நலனையே தனது முதன்மையான இலக்காகக் கொண்டு செயல்படுவது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரிய ஒரு விஷயமாகும்.

அதேபோல், சவூதி அரேபிய மக்களின் இதயப்பூர்வமான ஒத்துழைப்பும், அவர்களின் விட்டுக்கொடுக்காத தாராள மனப்பான்மையும் இப்பணிகளுக்குப் பெரும் பலமாகத் திகழ்கிறது. அவர்கள் கருணையும் பிறருக்கு உதவும் நற்பண்பும் நிறைந்த ஒரு சமூகமாக உலகிற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ், சவூதி அரேபியாவை பாதுகாப்பான நாடாக வைத்திருக்கட்டும். அதன் மன்னரையும் இளவரசரையும் நீண்ட ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும் பாதுகாத்து, அவர்களின் நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, மேலும் பல நன்மைகளைச் செய்யும் வலிமையை அவர்களுக்கு அருளட்டும். அந்த நாட்டின் மக்களுக்கும் அமைதி, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அனைத்தும் என்றும் நிலைத்திருக்க இறைவன் அருள் புரியட்டும்.

(எஸ். சினீஸ் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *