உள்நாடு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட தெனியாய மலையக மக்களுக்கு பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் நிவாரண உதவி


பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினர், கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டு தற்போது பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வரும் மாத்தறை மாவட்டத்தின் கொடபொல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அலப்பதென்ன தோட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது, அவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலைமைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.

அதேவேளை, டித்வா புயலினால் மரம் விழுந்து முழுமையாக வீடு சேதமடைந்த ஹுளந்தாவ பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு வீட்டுக் கூரைக்கான சீட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *