வட மத்திய ஆளுனர் தலைமையில் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு
கெப்பித்திகொல்லாவ மற்றும் ஹொரவப்பொத்தானை பிரதேச செயலகங்களில் நடமாடும் சேவை மூலம் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச , அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்த குமார நவரத்ன , பி.டி.என்.கே.பலிஹேன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நீண்ட காலமாக காணி உரிமை பத்திரம் இன்றி அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்திருந்த மக்களுக்கு நடமாடும் சேவையின் மூலம் தகுதி பெற்ற விவசாயிகளுக்கு நில அபிவிருத்தி அவசரச் சட்டத்தின் கீழ் கெப்பித்திகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 607 விவசாயிகளுக்கும் ஹொரவப்பொத்தானை பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட 150 விவசாயிகளுக்கும் காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ. ஆரீப் – அநுராதபுரம்)
