மூதூர் தள வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
மூதூர் தள வைத்தியசாலையின் தற்போதைய நிலை மற்றும் அவசியமான தேவைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இவ்வைத்தியசாலைக்கு நேரடி விஜயமொன்றை (20) மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வின் போது, அவர் வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளிடமும் பணியாளர்களிடமும் கேட்டறிந்தார். மேலும், தேவையான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனுடன் தொடர்புடைய நிகழ்வில், அவர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஒரு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மூதூர் தொகுதி அமைப்பாளர் சப்ரான், பிரஜா சக்தி குழுவினர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மற்றும் அந்தக் கட்சியின் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




(எம்.ஏ.முகமட்)
