உலகம்

பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எண்ணம் இல்லை

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது தொடர்பில் ஈரான் இன்னும் தீர்மானிக்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.

இன்று (20) மாலை திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவொன்று பாகிஸ்தானுக்குச் செல்வதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடற்படை முற்றுகை என்று சொல்லப்படுபவை தொடர்வதாலும், போர்நிறுத்த மீறல்கள் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தும் பேச்சுக்கள் காரணமாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் அதிகாரிகளுக்கு இல்லை என ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *