புத்தளம் இஸ்லாஹிய்யா பழைய மாணவிகள் ஒன்றியத்தின் கன்னி சஞ்சிகை பார்வை வெளியீடு
புத்தளம் ‘இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி’யின் ‘வாரிஸாதுல் இஸ்லாஹிய்யா’ (பழைய மாணவியர் ஒன்றியம்) தனது முதலாவது ‘பார்வை’.என்ற சஞ்சிகையை வெளியீட்டுள்ளது.
இவ்வமைப்பு உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு ஒரு வருடகாலத்துக்குள் முதல் பிரசவம் இடம்பெற்றுள்ளது. “அறிவியலின் பல்வேறு பரிணாமங்கள் வெவ்வேறு கோணங்களில் ஆழமாக ஆராயப்பட்டு சமூகத்துக்கு எடுத்துச்செல்லப்படல் வேண்டும்” என்ற, ‘பார்வை’ ஆசிரியரின் பார்வை நிறைவேறிவருவதனை ‘பார்வை’ பறைசாற்றுகிறது.
இலங்கை முஸ்லிம் பெண்களின் இலக்கிய வகிபாகம், பெண்களின் ஆளுமையும் தலைமைத்துவப் பண்புகளும், கல்விக்குள் நிலவும் பண்பாட்டு வறுமை எனும் முரண்நகை, குடும்பம் ஒன்றை வளமாக்குவதில் மஸ்ஜிதுகளின் பங்களிப்பின் வறுமைதத்துவம், ‘ஷரீஆ’ துறையில் கற்போர் பொதுச் சட்டத்தையும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியம், திருமண வாழ்விலும் குடும்பக் கட்டமைப்பிலும் எதிர்கொள்ளப்படும் சவால்கள், இஸ்லாம் வழங்கும் கல்வித் தத்துவம் போன்ற பல்வேறு விடயங்கள் ‘பார்வை’யில் ஆய்வுரீதியாக ஆழமாக ஆராயப்பட்டு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
1989 இல் உருவாக்கப்பட்ட புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் வரலாற்றில், அதன் அதிபர் மர்ஹூம் உஸ்தாத் M.H.M.M. முனீரின் இழப்பு ஈடு.செய்யமுடியாத ஒரு பேரிழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
