உள்நாடு

புத்தளம் தள வைத்தியசாலைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை ஸ்தாபிக்க இந்தியாவின் நிதி அன்பளிப்பு

புத்தளம் தள வைத்தியசாலைக்கு இந்திய அரசின் 2 மில்லியன் டொலர் (ரூ60 கோடி) அன்பளிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான A&E கட்டிடம் சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்த நடைபெறும் முயற்சிகளின் அங்கமாக மத்திய அரசின் நேரடி கவனிப்பில் இவ்விடயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம் Dr. ஸ்ரீதரன் புத்தளம் தளவைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் நிர்மாண பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *