ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று (12) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ள ஜப்பானிய வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக கடல் அலைகள் 1 மீற்றர் (39 அங்குலம்) வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையும் அதே பிராந்தியத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
