உள்நாடு

திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் சாதனை

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சார போட்டி நிகழ்ச்சியில் வட மேல் மாகாணத்தின் புத்தளம் கல்வி வலயத்தின் கற்பிட்டி கோட்டத்திற்குட்பட்ட திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம் கஸீதா போட்டியில் பிரிவு ஒன்றில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இவ் வெற்றி குறித்து அதிபர் எஸ்.எல்.எம். மின்சார் குறிப்பிடுகையில், “இப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய தரம் 8 மாணவிகளான முஹம்மது ரிஸ்மின் ஆயிஷா , முஹம்மது ரிஸ்மின் ஆமினா , முஹம்மது ரியாஸ்தீன் ஹிக்மா , முஹம்மது சலீம் ஹிமா மரியம் , முஹம்மது சலீம் ஹிபா மரியம் ஆகியோருக்கும் பயிற்றுவித்த ஆசிரியை ஏ.டபில்யூ.எப். லிஸ்ரா அவர்களுக்கும் ஒத்துழைத்த கல்லூரி நிர்வாகம் ஏனைய ஆசிரியர்கள் , வெற்றி ஈட்டிய மாணவர்களின் பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

(காசிம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *