பாத்ததும்பர பிரதேசத்துக்கு புதிய காதி நீதவான் நியமனம்
உடதும்பர, மெததும்பர, பாத்ததும்பர நீதி நிருவாகப் பிரதேசங்களுக்கான புதிய காதி நீதவானாக அப்துல் சத்தார் மொஹமட் ரிஸ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த( 06) வியாழக்கிழமை அன்று கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி சமன் பி. காரியவசம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மடவளை மதீனா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான ஏ.எஸ்.எம் ரிஸ்னி, விஞ்ஞான கணித பட்டதாரியும் ஆங்கிக பயிலுனர் ஆசிரியரும் ஆவார்.
இவர் குரு/பரகஹதெனிய தேசிய பாடசாலையில் உயர்தர இணைந்த கணித ஆசிரியராகவும், மடவளை மதினா தேசிய பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக கடமை புரிந்துள்ள இவர், பகுதி தலைவர் மற்றும் பிரதி அதிபராகவும் கடமை புரிந்து, அண்மையில் ஓய்வு நிலையை அடைந்துள்ளார்.
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் உப தலைவராகவும் தற்பொழுது பணியாற்றி வருகிறார்.
இவர், மடவளையைச் சேர்ந்த அப்துல் சத்தார் மற்றும் சஹ்தூனா உம்மா ஆகியோரின் மகனாவார்.
(எம்.ஏ.அமீனுல்லா)
