Saturday, May 9, 2026
Latest:
உள்நாடு

தனக்கு கற்பித்த ஆசிரியரைக் கெளரவித்த பிரதேச செயலாளர் ஏ.தாஹிர்

உடல் நலக்குறைவால் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் தனக்கு கற்பித்த ஆசிரியரும் ஓய்வுபெற்ற ஓட்டமாவடி மத்திய கல்லூரி அதிபருமான எம்.சீ.எச்.முஹம்மட்டை கெளரவிக்கும் வகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் நேரடியாக அவரது வீட்டிற்குச்சென்று பொன்னாடை போர்த்தி கெளரவித்து முன்மாதிரிமிக்க செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த போது, அவருக்கு வழங்கிய கெளரவத்தைப் பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் அந்த கெளரவத்தையும் உயர்நிலையையும் அடைய முக்கிய காரணமாக இருந்த, தனக்கு கற்பித்து வழிகாட்டிய ஆசிரியரைக் கெளரவிக்கும் வகையில் குறித்த முன்மாதிரிமிக்க செயற்பாட்டை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *