Saturday, May 9, 2026
Latest:
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதாவின் கோரிக்கை நிறைவேற்றம்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதாவின் கோரிக்கைக்கமைய ஹுதா பள்ளிவாயல் வீதியில் சேதமடைந்து காணப்பட்ட வடிகான் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் அவர்களின் நேரடிக்கண்காணிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இவ்வடிகான் சேதமடைந்து மண், குப்பை, கூழங்கள் நிறைந்து கழிவுநீர் வடிந்தோட முடியாத நிலை
காணப்பட்டமையினால் பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், பள்ளிவால்களுக்கு செல்வோர் எனப்பல தரப்பினரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

இதனைக்கருத்திற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதா தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளர் நேரடியாகப் பார்வையிட்டு புனரமைப்பு பணிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், வடிகான் புனரமைப்புப்பணிகள் வேகமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.

தனது கோரிக்கையை கவனத்திற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளருக்கு பிரதேச மக்கள் சார்பில் பிரதேச சபை உறுப்பினர் நன்றி தெரிவித்ததுடன், குறித்த வடிகானை புனரமைக்க முயற்சி மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினருக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *