பலத்த மழை பெய்யலாம்..!
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யலாம்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
