உள்நாடு

மலேஷிய அபகஸ் போட்டியில் முதலிடம் பெற்ற வரகாபொல பாபுல்ஹஸன் மாணவன் சப்ரானுக்கு தும்மலதெனிய பள்ளியில் கெளரவம்..!

மலேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அபகஸ் மன கணித போட்டியில் 12 நாடுகளுடன் போட்டியிட்டு முதலாம் இடத்தை பெற்ற வரகாபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் தும்மலதெனியவை சேர்ந்த முஹம்மது சப்ரான் முஹம்மது அக்மலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு தும்மலதெனிய அர் ரஹ்மா ஜும்மா பள்ளிவாசலில் இடம் பெற்றது.பள்ளிவாயல் தலைவர் எம்.எப்.எம்.பஸ்லின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவனுக்கு நினைவுச்சின்னம் வழங்குவதையும் வரகாபொலை பிரதேச சபை தலைவர் சந்தன ஹேரத் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஜமாஅத்தினர் கலந்து கொண்டதையும் படத்தில் காண்கிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *