ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்ட ஸாதாத்தின் பழைய மாணவி இஸ்மா..!
க.பொ.த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்து ஜனாதிபதி அவர்களினால் சான்றிதழும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் கொடபிடிய போர்வையைச் சேர்ந்த இஸ்மா.
தென்னகத்தின் பிரசித்தி பெற்ற போர்வையூரைச் சேர்ந்த நஸார் அஸ்மியா தம்பதியினரின் மூத்த புதல்வியும், மாறை/ கொடபிடியா ஸாதாத் மகா வித்தியாலய பழைய மாணவியுமான எம். என். எப் இஸ்மா, மாறை/ அறபா தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தர உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் (Bio System Technology) சென்ற வருடம் (2024) தேசிய பரீட்சையில் மாவட்ட ரீதியாக அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பத்து மாணவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு கௌரவவிக்கப்பட்டார்.
இம் மாணவிக்கு மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழி என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இம் மாணவி மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இரு பாடசாலைக்கும் இந்த கௌரவத்தைப் பெற்றுத் தந்த அந்த மாணவியை பாடசாலைகள் சார்பாக வாழ்த்துகின்றோம்.
(இப்னு அஸாத்)
