நவசேனபுர அல் ஹிக்மா அஹதிய்யாவின் ஆண்டு 16 ஆவது ஆண்டு நிறைவும், பரிசளிப்பு விழாவும்
பொலன்னறுவை மாவட்டத்தின் நவசேனபுர அல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலையின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசளிப்பு விழாவும் மலர் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
அல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் அஷ;nஷய்க் வை.எல்.எம்.றாபிக் தலைமையில் நவசேனபுர அல் அமீன் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ;nஷய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி வெலிகந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொலன்னறுவை மாவட்ட உலமா சபை தலைவர் மௌலவி எம்.எம்.அலாவுதீன், பொலன்னறுவை மாவட்ட அகதியா பாடசாலைகளின் சம்மேளன பொது செயலாளர் ஜிப்ரி ராஸிக், அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளன உப தலைவர் தேசமான்ய ஏ.எல்.எம். அஸ்வர், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள கலாசார உத்தியோகத்தர் மௌலவி பி.டி.ரவூப்தீன், வெலிகந்த பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். எம். ஹனிபா சேனபுர அல் அமீன் வித்தியாலய அதிபர் மௌலவி என்.நிஸாமுதீன் பிரதேசத்தின் தொழில் அதிபர்கள் உலமாக்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு மாணவர்களுக்கான நினைவு சின்னமும் சான்றிதழும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
மலர் அறிமுகத்தினை சேனபுர அல் அமீன் வித்தியாலய அதிபர் மௌலவி என்.நிஸாமுதீன் வழங்கியதுடன் நிகழ்ச்சி தொகுப்பினை அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளன உப தலைவர் தேசமான்ய ஏ.எல்.எம். அஸ்வர் நடாத்தி வைத்தார்.













(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
