பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி; ஹிரா இல்லம் சம்பியனாக தெரிவு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் 13 ஆவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு (26) வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டு விழா நிகழ்வில் மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
இதில், புள்ளிகள் அடிப்படையில் ஹிரா இல்லம் முதலாம் இடத்தையும், சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், மர்வா இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
இந்நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரீ.எம்.எஸ்.அஹமட், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர், பாடசாலையின் இ.பி.எஸ்.ஐ.இணைப்பாளர் ஆர்.ஜுனைதீன், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




(எச்.எம்.எம்.பர்ஸான்)
