வாழைச்சேனை அந்நூரில் சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20.02.2025) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பத்து வருடங்களாக அந்நூர் தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றி உதவிக் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் ஏ.எம்.எம்.தாஹிர் கல்வி பொது தராதார சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் சாதனை புரிந்த மாணவர்களும் பாராட்டி நினைவுச் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் எம்.பி.எம்.அன்வர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக வாழைச்சேசனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.எஸ்.முஹம்மட், தொழில் அதிபர்களான எம்.எஸ்.சம்சுதீன், ஐ.எம்.றிஸான் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாததின் சேவையினைப் பாராட்டியும் மாணவர் சங்க நிருவாக உறுப்பினர் ஏ.எம்.எம். முபீன் பாடசாலைக்கு ஆற்றிவரும் சேவையை பாராட்டியும் இருவருக்கும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததனர்.
அதே போன்று பதவி உயர்வு பெற்று சென்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிருக்கு பாடசாலை சமுகம் பழைய மாணவர் அமைப்புக்கள் என்பன பொற்கிளி வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தி பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர். பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் பற்றி பழைய மாணர்களால் கவி வாழ்த்தும் பாடப்பட்டது.
















































(எஸ்.எம்.எம்.முர்ஷத்)